த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன் - குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது
சினிமா
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்தது பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து புகார் அளித்தபோது, விஜய் ரசிகர்கள் எல்லோருக்கும் விஜய்க்கு ஆதரவாக தான் பேசினார்கள். விஜய்யின் அரசியல் பயணத்தை கெடுக்க இப்படி செய்கிறார் என விமர்சித்தனர்.
ஆனால் விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக வெளியில் வந்ததும் ட்ரோல்கள் எல்லாம் அவர்கள் பக்கம் திரும்பிவிட்டது. பிரபலங்கள் பலரும் விஜய் மற்றும் த்ரிஷாவை தாக்கி பேசி வருகின்றனர்.
நடிகர் பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது அவரிடம் பொன்னியின் செல்வன் குந்தவையாக நடித்த த்ரிஷா போட்டோவை காட்டி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் த்ரிஷா வீட்டிலேயே இருந்தால் நல்லது என கூறி இருக்கிறார்.
"குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது" என அவர் கூறியுள்ளார்.
விஜய் விவகாரம் பற்றி பார்த்திபன் இப்படி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





















