எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்
இலங்கை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்கள் காரணமாக, எதிர்வரும் வாரங்கள் எமது நாட்டிற்கு ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கக்கூடும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று (06) தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மத்திய கிழக்கு மோதல்களினால் எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தற்போதைய மோதலின் விளைவாக கடல் மற்றும் விமானப் போக்குவரத்து பாதைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இந்த சாத்தியமான இடையூறுகளுக்குக் காரணம்.
மேலும், இந்த உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக தற்போதைய அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.























