• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் 

இலங்கை

குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UPDATE 02

இன்றையதினம் யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் இருவர் பலியாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில் “இன்றையதினம் குருநகர் இறங்குதுறையில் இருந்து படகு ஒன்றில் பலர் பாலைதீவு நோக்கி சென்றனர். இதன்போது குறித்த படகு தண்ணீரில் கவிழிந்துள்ளது.

இந்நிலையில் 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன ஏனையோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
 

Leave a Reply