2000 இலக்குகள் அழிப்பு - 17 கப்பல்களை தாக்கிய அமெரிக்க ராணுவம்
இலங்கை
ஈரான் மீதான தாக்குதல்களில் 17 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு, 2,000 இலக்குகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு ராணுவ நடவடிக்கையான 'ஆப்பரேஷன் எபிக் பியூரி' நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தளபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தொடங்கி ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், ஏவு தளங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை அழித்துவிட்டோம். அமெரிக்க கடற்படை தீவிரமாக செயல்பட்டு, ஈரானின் முழு கடற்படையையும் மூழ்கடித்து வருகிறது.
இதுவரை, 17 ஈரானிய கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் ஈரானின் மிக முக்கியமான மற்றும் செயல்பாட்டில் இருந்த நீர்மூழ்கி கப்பலும் அடங்கும். தொடர்ந்து 24 மணி நேரமும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறோம்.
நுாற்றுக்கணக்கான போர் விமானங்கள், 50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள், இரண்டு விமானம் ஏந்திய கப்பல்கள் , கனரக குண்டுவீசும் விமானங்கள் உள்ளிட்ட பெரும் படைப்பலம் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.























