வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்
இலங்கை
திருவள்ளுவரின் குருபூசை தினம் இன்று வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டிருந்ததுடன், திருவள்ளுவர் தொடர்பான நினைவு பேருரையினை பாடசாலை மாணவி செல்வி ம.தலிஷா மற்றும் தமிழ்மணி அகளங்கனாலும் நிகழ்த்தப்பட்டிருந்தது.
வவுனியா மாநகரசபையின் ஏற்பாட்டில் மாநகரசபை செயலாளர் பாலகிருபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






















