வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு
இலங்கை
யாழ்ப்பாணம் வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற் தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் சக மீனவர்கள் குறித்த இரு மீனவர்களையும் தேடி கடலுக்குள் சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறான நிலையில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்துக்கும் கடற்கரையினருக்கும் மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் தகவல் தெரிவித்தும் ஆறு நாட்களாகியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கச்சதீவுக்கு அருகாமையில் இந்திய எல்லைக்கு அருகில் குறித்த இரு மீனவர்களையும் கண்டதாகவும் அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கியதாக இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர் எனவும் ஆனால் காணாமல் போன இரு மீனவர்களையும் தேடி தருவதற்கு இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சகா மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடற் தொழில் அமைச்சருக்கும் தகவல் வழங்கியதாகவும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை இடம்பெறவில்லை எனவும் மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.






















