ஈரானின் வெளிநாட்டு நடவடிக்கைகளை முடக்கத் திட்டம்
ஈரானின் குத்ஸ் படை தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஈரானின் வெளிநாட்டு நடவடிக்கைகளை முடக்க இஸ்ரேல் திட்டம்போடுகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரானிலுள்ள ஈரானின் இராணுவ மற்றும் உளவுத்துறை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. எனினும் தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை.
இந்தநிலையில், ஈரானிய ஆட்சியின் முக்கிய உளவு அமைப்பான ஈரானிய உளவுத்துறை அமைச்சுக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தலைமையகங்கள், தாக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஈரானின் வெளிநாட்டு நடவடிக்கைகளைக் கவனிக்கும் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையின் குத்ஸ் படையினரின் பல தலைமையகங்களையும் தமது இராணுவம் தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.





















