அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னர் பதற்றம் - ஈரான் முழுவதும் துக்கப் பேரணி
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பிறந்த இடமான வடகிழக்கு மஷ்ஹாத் உட்பட பல்வேறு நகரங்களில் இன்று பேரணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறைந்த உச்ச தலைவருக்காக துக்கம் அனுசரிக்கும் வகையில், மாலை தொழுகையைத் தொடர்ந்து மக்கள் ஒன்று கூட வேண்டிய தலைநகரின் 22 இடங்கள் அடங்கிய பட்டியலை ஈரான் செய்தி நிறுவனங்கள் இன்று வெளியிட்டிருந்தன.
அங்கிருந்த கூட்டத்தினர் "இஸ்ரேலுக்கு மரணம்" மற்றும் "அமெரிக்காவிற்கு மரணம்" என முழக்கமிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் அரசாங்கம் 40 நாட்கள் பொதுத் துக்க தினங்களை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















