புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சி நிறைவு
இலங்கை
கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராமை விஹாரையில் கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி ஆரம்பமான புத்த பெருமானின் புனித தேவ்னிமோரி சின்னங்களின் கண்காட்சியானது இன்று (11) காலை நிறைவடைந்தது.
கடந்த ஆறு நாட்களில் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உள்ளிட்டோரும் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் இந்தக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” கண்காட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் பெப்ரவரி 04 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த புனித சின்னங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.























