• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தம்புள்ளையில் கிரிக்கெட் போட்டியை காண வந்த இளைஞர் குழுவிற்கு நேர்ந்த துயரம்

இலங்கை

A9 வீதியின் மிகிந்தலை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்வையிடுவதற்காக வந்து, மீண்டும் வேன் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர் குழு ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மிகிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply