கவர்ச்சியில் களம் இறங்கிய கர்ணன் பட கதாநாயகி..
சினிமா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான படம் 'கர்ணன்' . இதில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கேரள நடிகை ரஜிஷா விஜயன்.
தொடர்ந்து சூர்யா நடித்த 'ஜெய் பீம்' மற்றும் கார்த்தி நடித்த 'சர்தார்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
கடைசியாக கடந்த தீபாவளிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' படத்தில் துருவ் விக்ரமுக்கு அக்காவாகவும், பசுபதிக்கு மகளாகவும் நடித்திருந்தார்.
இந்நிலையில், மலையாளத்தில் இயக்குநர் கிரிஷாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள உருவாகியுள்ள 'மஸ்திஸ்கா மரணம்' என்ற படத்தில் 'கோமல தாமரா' என்ற கவர்ச்சி பாடலில் ரஜிஷா விஜயன் நடனமாடியுள்ளார்.
குடும்பப்பாங்கான எதார்த்தமான வேடங்களில் நடித்து வந்த ரஜிஷா முதல் முறையாக கமர்ஷியல் கவர்ச்சியில் களம் இறங்கி உள்ளார்.






















