• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின்சாரசபை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிராஜினாமா

இலங்கை

இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது ஹெடிகல்ல பதவியை ராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

இதேவேளை வலுசக்தி அமைச்சருடனான முரன்பாடு காரணமாகவே இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டு இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு செயலகம் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன் அதன் பணிப்பாளர் நாயகமாக புபுது நிரோஷன் ஹெடிகல்ல நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் குறித்த கடமைகளை முன்னெடுத்திருந்தார்

அத்துடன் அவரது சேவைக்காலத்தினை மேலும் ஒருவருடமாக நீடிப்பதற்கு வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அதனை ரத்துசெய்தார்

எனினும் அதன்பின்னர் ஜனாதிபதியின் தலையீட்டின் பிரகாரம் புபுது நிரோஷன் ஹெடிகல்லவின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பிண்ணினியில் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியை ராஜினாமா செய்வதற்கு புபுது நிரோஷன் ஹெடிகல்ல தீர்மானித்துள்ளார்

அவரது பதவிவிலகல் தொடர்பாக வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்
 

Leave a Reply