• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆளுக்கு தலா ஒரு லட்​சம் டாலர் - கிரீன்​லாந்தை கைப்​பற்ற அமெரிக்காவின் புதிய வியூ​கம்

கிரீன்​லாந்தை கைப்​பற்ற அமெரிக்கா புதிய வியூ​கத்தை வகுத்​திருக்​கிறது. இதுதொடர்​பாக அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது : கிரீன்​லாந்து தீவில் சுமார் 57,000 பேர் வசிக்​கின்​றனர்.

அவர்​களுக்கு தலா ஒரு லட்​சம் டாலர் வழங்க முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. இதன்​மூலம் கிரீன்​லாந்து மக்​கள் அமெரிக்கா​வுக்கு ஆதரவு அளிப்​பார்​கள். எந்த வகையி​லா​வது கிரீன்​லாந்து தீவை விலை கொடுத்து வாங்​கு​வோம்.

இல்​லை​யென்​றால் ராஜ்ஜியரீ​தி​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி கிரீன்​லாந்தை அமெரிக்கா​வுடன் இணைப்​போம். தேவைப்​பட்​டால் ராணுவ நடவடிக்கை எடுக்​க​வும்​ தயங்​க மாட்​டோம்​ என  அமெரிக்​க அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

இரண்டாம் உலகப்போரின்போதே கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க முயற்சி செய்தது. அதற்கு டென்மார்க் சம்மதம் தெரிவிக்க வில்லை. தற்போது அதிபர் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக பறிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அதேவேளை பாது​காப்பு காரணங்​களுக்​காக கிரீன்​லாந்து தீவு அமெரிக்கா​வுடன் இணைக்​கப்​படும் என்று அதிபர் ட்ரம்ப் அண்​மை​யில் தெரி​வித்​தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி, இத்​தாலி, போலந்​து, ஸ்பெ​யின், டென்​மார்க் ஆகிய நாடு​கள் ஒன்​றிணைந்து வெளி​யிட்ட அறிக்​கை​யில்,

“கிரீன்​லாந்​தில் வசிக்​கும் மக்​களுக்கே அந்த தீவு சொந்​தம். இதை வேறு யாரும் சொந்​தம் கொண்​டாட முடி​யாது. கிரீன்​லாந்​தின் எதிர்​காலத்தை டென்​மார்க், கிரீன்​லாந்து மட்​டுமே முடிவு செய்ய முடி​யும் என்றும் தெரிவிக்​கப்​பட்​டது.
 

Leave a Reply