• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சம்பளத்தை உயர்த்திய நடிகை ராஷ்மிகா.. 

சினிமா

நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக அனிமல் பட வெற்றிக்கு பிறகு ஹிந்தியில் தான் அவர் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது மைஸா என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்தின் போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வைரல் ஆனது. அதில் ரத்தத்துடன் ராஷ்மிகா இருப்பது போல காட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ராஷ்மிகா வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. தனக்கு அதிகம் வரவேற்பு இருப்பதால் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் கேட்கிறாராம் ராஷ்மிகா.

அடுத்த வருடம் அவர் நடிக்க இருக்கும் படங்களுக்கு இந்த சம்பளத்தை கேட்கிறாராம் அவர். வரும் 2026 பிப்ரவரி மாதத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply