அமெரிக்காவில் துப்பாக்கி சூடு- 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டாக்டனில் உள்ள விருந்து மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்? என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.























