நயன்தாராவுக்கு தனுஷ் பாணியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்
சினிமா
நடிகை நயன்தாரா நேற்று தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடினார். நள்ளிரவு குடும்பத்தோடு கேக் வெட்டி நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே, நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி 'ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது. படக்குழு வெளியிட்ட அந்த போஸ்டரில் ரஜினி, கமல் படங்களுக்கு இடையே நயன்தாரா நிற்பது போன்று உள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கினர்.
இந்த நிலையில், நயன்தாராவுக்கு அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், எண்ணம்போல் வாழ்க்கை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உயிர். நீ பிறந்த தினம் வரம். உன்னை உண்மையாக, பைத்தியமாக, ஆழமாக நேசிக்கிறேன் என் அழகி. உன்னை நேசிக்கிறேன். உன் உயிர், உலக், பெரிய உயிர், உன் அன்பான மக்கள் அனைவரிடமிருந்தும் மிகுந்த இதயத்துடனும் அன்பு நிறைந்த வாழ்க்கையுடனும் பிரபஞ்சத்திற்கும் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.























