கல்முனையிலும் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்
இலங்கை
கல்முனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் இன்று (19) கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த மீன் சுமார் 3 முதல் 4 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள காலநிலை காரணமாக கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த மீனை காண்பதற்கு அப்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தவிர ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கடலாமைகள் டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.






















