• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாரணாசியில் வெடித்த அனுமார் சர்ச்சை - இயக்குநர் ராஜமௌலி மீது போலீசில் புகார்

மகேஷ் பாபுவின் 25வது படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு வாரணாசி என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிருத்விராஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் 2027 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் அறிமுக டீசர் அண்மையில் ஐதராபாத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்வில் பேசிய ராஜமௌலி, "எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அதை கேட்டு நினைத்து எனக்கு கோபம் வந்தது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு மிகவும் கோபம் வந்தது" என்று தெரிவித்தார்.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக வாரணாசி டீசரில் இந்து தொன்மம் குறித்த காட்சிகள் இடமபெட்ருந்த நிலையில், வணிகத்துக்காக இந்து மதம் பற்றி படம் எடுத்துக்கொண்டு அவற்றை நிஜத்தில் நம்ப முடியாது என ராஜமௌலி கூறுவதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் அனுமனை வமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக 'ராஷ்ட்ரிய வானரசேனா' என்ற அமைப்பு ராஜமௌலி மீது ஐதராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

வாரணாசி பட விழாவில் ராஜமௌலியின் கருத்து இந்துக்களின் உணர்வுகளை கடுமையாக புண்படுத்தியதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 
 

Leave a Reply