• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போரை முடிவுக்கு கொண்டு வர புதிய முயற்சி - துருக்கியில் அமெரிக்க தூதரை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியா உக்ரைனில் உள்ள எனர்ஜி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா தாக்குதலை முறியடித்து உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளையில் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார். ரஷியாவை எதிர்ப்பதற்கு ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று ஸ்பெயினில் இருக்கும் ஜெலன்ஸ்கி நாளை, துருக்கி செல்கிறார்.

துருக்கி செல்லும் அவர் அமெரிக்காவின் சிறப்பு தூதராக ஸ்டீவ் விட்காஃவை சந்திக்க இருக்கிறார். அப்போது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய முயற்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்துப்படக்கூடும் எனத் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை ரஷியா யாரையும் அனுப்பவில்லை. துருக்கி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

துருக்கி இந்த வருடம் தொடக்கத்தில் உக்ரைன்- ரஷியா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இந்த பேச்சுவார்த்தையும் போர் நிறுத்தம் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேவேளையில் இரு நாடுகளுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைகள் மீண்டும் புத்துயிர் பெற நாங்கள் தயாராகி வருகிறோம். மேலும் எங்கள் கூட்டாளர்களுக்கு முன்மொழியும் தீர்வுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். போரை முடிவுக்கு கொண்டு வர முடிந்த அனைத்தையும் செய்வது உக்ரைனின் முதன்மையான முன்னுரிமையாகும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் பரிந்துரைகளை ரஷியா நிராகரித்ததால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply