• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விபத்து நடந்த இடத்தை பார்வையிட சென்ற விமானத்தில் திடீர் தீ - உயிர் தப்பிய உள்துறை மந்திரி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் லுவாலாபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத் தளத்தில் நவம்பர் 15-ம் தேதி பாலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்கே பாதுகாப்பிற்கு இருந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு பீதியடைந்த தொழிலாளர்கள், சுரங்கத்தில் பாலம் வழியாக தப்பி செல்ல முயன்ற போது திடீர் அழுத்ததால் பாலம் சரிந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட காங்கோ சுரங்கத்துறை மந்திரி லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் அவரது குழுவை சேர்ந்த 19 பேர் தலைநகர் கின்ஷாசாவிலிருந்து விமானம் மூலம் லுவாலாபா மாகாணத்தின் கோல்வேசி விமான நிலையம் சென்றனர்.

கோல்வேசி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது ரன்வேயில் இருந்து விலகிச்சென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.

அங்கிருந்த அவசர கால மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தீயையும் அணைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
 

Leave a Reply