சிவாஜி நடிக்க வந்து ரெண்டாவது வருசம் வெளியான படம்
சினிமா
1954 ஆம் வருசம் சிவாஜிகணேசன் நடிச்சு வெளிவந்த படம் மனோகரா. சிவாஜி நடிக்க வந்து ரெண்டாவது வருசம் வெளியான படம் இது. இந்த பட வசனம் எவ்வளவு பிரபலமாச்சுதுன்னு எல்லாருக்கும் தெரியும். சிவாஜி சினிமாலே நடிச்ச முதல் சரித்திர கற்பனை படம் இது.
தமிழ்லே வசனம் பேசி நடிச்சது ஒரு சிறப்புன்னா அதை விட ஒரு ஆச்சர்ய சாதனையா இன்னொரு விஷயமும் இருக்கு. இது அதிகமா யாருக்கும் தெரியாத விஷயம்.
மனோகரா படத்தோட டைரக்டர் L.V.பிரசாத்.இந்த படத்தை இவர் தமிழ் தெலுங்கு இந்தின்னு மூணு மொழிலே படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுனார்.அதனாலே இந்த படத்தை 1954 லிலேயே வெளியான பான் இந்தியா படம்னு சொல்லலாம்.
மனோகரா படத்துலே தர்பார் வசன காட்சி தமிழ் சினிமாலே ஒரு புயல் போலே அமைஞ்ச காட்சி.சிவாஜியை சங்கிலியாலே கட்டி இழுத்து அரச சபைக்கு இழுத்து வர்ற காட்சி இருக்கும். படத்துலே ரொம்ப முக்கியமான காட்சி இது.
இந்த காட்சிக்கான படப்பிடிப்பை ஷூட்டிங் பண்ண பிரசாத்தும் யூனிட்டும் தயாரா இருக்காங்க.
இந்த காட்சிலே சிவாஜி மட்டும் இல்லாமே மன்னர் புருசோத்தமரா நடிச்ச சதாசிவராவ் , TR.ராஜகுமாரி ,அமைச்சர் சத்யசீலன் கேரக்டர் ,
ஜாவர்சீதாராமன் ,SSR கண்ணாம்பா உள்பட இன்னும் பல பேரும் அரசாங்க ஊழியர்கள்ர்னு நிறைய கூட்டம்னு நெறைஞ்ச காட்சி இது.
இப்படி இருக்கற ஒரு காட்சிலேதான் சிவாஜி ஆக்ரோசமா வசனம் பேசி நடிக்கணும்.
இந்த வசனம் பேசி நடிக்கறது சிவாஜிக்கு ஒரு பெரிய விஷயமே இல்லேதான். சினிமாலே நடிக்க வர்றதுக்கு முன்னாலேயே பல பக்க வசனங்களை தடுமாறாமே வசனம் பேசி எல்லோரையும் அசத்துனவர் சிவாஜி.
இப்ப இந்த காட்சிலே சிவாஜி தமிழ்லே வசனம் பேசி நடிக்கணும். அது முடிஞ்சதும் அந்த காட்சியை தெலுங்குலே எடுக்க முடிவு பண்ணினார் டைரக்டர் பிரசாத். அது திடீர்னு எடுத்த முடிவு. தெலுங்கு படத்துலயும் இதே நடிகர்கள் தான் அப்படிங்கறதாலே இவ்வளவு பேரை வெச்சுகிட்டு மறுபடியும் ஒரு நாள் எதுக்கு ரிஸ்க் எடுக்கணும். அதனாலே அதே ஸ்பாட்டுலேயே அப்பவே தமிழ் வசனம் பேசற ஷூட்டிங் முடிஞ்சதும் ,அதே சூட்டோட அதே வசனங்களை தெலுங்கு மொழிலே பேசி நடிக்கறமாதிரி எடுத்துடலாம்னு பிளான் பண்ணினார் பிரசாத் .
சிவாஜிகிட்டே வந்து பிரசாத் ,இந்த படத்தை மூணு மொழிலே எடுக்கப்போறோம்.
அதனாலே தெலுங்குலே நீங்களே பேசி நடிக்கணும்னு சொன்னார்.தெலுங்கு வசனங்களை தமிழ்லே ரெடி பண்ணி கொடுத்துடுங்க. நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டார் சிவாஜி.
நாளைக்கு ஷூட்டிங் காலைலே 7 மணிக்கு ஆரம்பமானா இடைவெளி இல்லாமே நடக்கும். நீங்க தமிழ்லே பேசி முடிச்சதும் ,கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் கன்டின்யூ பண்ணிக்கலாம்னு சொல்லிட்டார்.
சூட்டிங்லே இருந்த மத்தவங்களுக்கும் இதை சொல்லிட்டார் பிரசாத்.
திடீர்னு பிரசாத் இப்படிச் சொன்னதும் ஷூட்டிங் ஸ்பாட்டுலே இருந்தவங்க அதிர்ச்சி ஆயிட்டாங்க.தமிழ்லே சிவாஜி பட்டையை கிளப்பிருவார்னு தெரியும்.இதை அப்படியே தெலுங்குலே கொஞ்சம் கூட நேரம் கொடுக்காமே அப்படியே பேசனும்னா நடக்கற காரியமா ? எத்தனை டேக் ஆகுமோ ? எத்தனை தடுமாற்றம் வருமோ ? எப்ப எடுத்து முடியறதுன்னு எல்லாருக்கும் ஒரே திகைப்பு. வசனங்களும் சாதாரணம் இல்லே.அதையும் எமோசனலா பேசனும். கொதிச்சு தள்ளணும்.சிவாஜி இதுலே எப்படி சாதிக்க போறார்னு யூனிட்லே இருந்த பெரிய நடிகர்கள்லே இருந்து லைட் பாய் வரைக்கும் ஒரே எதிர்பார்ப்பு.
சிவாஜி பராசக்தி படத்துலே நடிச்சுட்டு இருந்த காலத்துலேயே பரதேசின்னு ஒரு தெலுங்கு படத்துலே நடிச்சிருந்தார்.அந்த படத்தை டைரக்சன் செஞ்சவரும் LV பிரசாத்னுதான்.அந்த படத்துலே சிவாஜிக்கு டப்பிங் வெச்சுக்கலாமான்னு யோசிச்சு ,சரி எதுக்கும் சிவாஜியை பேசச் சொல்லி பாக்கலாம் ,செட்டாச்சுன்னா சிவாஜியவே டப்பிங் பேச வெச்சு எடுத்துடலாம்னு பிரசாத் ,சிவாஜிகிட்ட சொல்ல ,சிவாஜியும் தெலுங்குலே பேசி அசத்திட்டார்.பிரசாத்துக்கு அப்பவே ஆச்சர்யமா போச்சு.
அந்த சம்பவத்தை மனசுல வெச்சுத்தான் பிரசாத்துக்கு ஒரு நம்பிக்கை.
இதை மனசுல வெச்சுட்டுத்தான் மனோகரா பட சூட்டிங் நேரத்துலே பிரசாத் சிவாஜிகிட்டே வந்து இதையே நீங்க தெலுங்குலே பேசி நடிக்கணும். தெலுங்கு பட காட்சியையும் எடுத்துடலாம்னு சொல்லறார்.அதுக்கு சிவாஜி ,அதுக்கென்ன பேசிட்டா போச்சுன்னு சொல்லிட்டார்.
ஷுட்டிங் ஸ்டார்ட் ஆக போகுது. எல்லாரும் சிவாஜியையே பாத்துட்டு இருக்கறாங்க.
சிவாஜி தமிழ் வசன காட்சியை அட்டகாசமா பேசி முடிச்சிட்டார்.காட்சி முடிஞ்சதும் டைரக்டர் கட் சொன்ன அடுத்த நிமிசமே சிவாஜி பிரசாத்கிட்டே ,சார் இப்பவே தெலுங்கு பட காட்சியையும் ஷுட் பண்ணிடுங்கன்னு சொல்லி..
மறுபடியும் சிவாஜியை சங்கிலிலே கட்டிட்டு இழுத்துட்ட வர்ற காட்சிலே இருந்து ஷூட்டிங் தொடங்குது.தெலுங்கு வசனங்களை மழை மாதிரி கொட்டித் தள்ளறாரு சிவாஜி.
பட படன்னு பட்டாசு மாதிரி பொரிஞ்சு தள்ளறாரு.எந்த வித தடுமாற்றமும் இல்லாமே ,தடங்கல் இல்லாமே சிவாஜி பேசி அசத்திட்டார்.
யூனிட்டே கப்சிப்புன்னு ஆயிடுச்சு.
அவங்களாலே நம்பவே முடியலே. இது எப்படி சாத்தியமாச்சுன்னு பெரிய ஆச்சர்யமா பாத்தாங்க.இதை ஒரு அதிசயம்னுதான் சொல்லணும்னு பேசிகிட்டாங்க.
ஒரு நடிகர் தமிழ்லே பேசி நடிக்கறது வேற விஷயம். அதே ஸ்பாட்டுலே எந்த வித முன்னேற்பாடு ,ஒத்திகையும் பாக்காமே இன்னொரு மொழியிலே தடுமற்றம் இல்லாமே வசனம் பேசி நடிக்கறதுங்கறது சாதாரணமான விஷயம் இல்லே. சிவாஜியோட நினைவாற்றல் சக்தி எந்தளவுக்கு இருக்கு அப்படிங்கறதுக்கு இது ஒரு உதாரணம் தான்.
Murugesan Ponnaiah






















