• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில்...

சினிமா

நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன்
அவர்கள் ஒரு தேர்ந்த நாதஸ்வரக் கலைஞரை நம் கண்முன் நிறுத்தியிருப்பார்...
அந்த வேடத்திற்காக அவர் தன்
நெற்றியில் வைத்திருக்கும்
திலகத்தில் கூட ஒரு அழகு,நயம் பொருத்தம்...
வழக்கமாக கோபமாக வசனம் பேசுவதில் மன்னரான நமது அய்யன் அவர்கள்...
இதில் தான் காதலிக்கும்
நடனமணி
( உலக நாட்டியப் பேரொளி
திருமதி. பத்மினி) தன்னை ஏமாற்றுகிறார் என்று எண்ணிக் கத்தும் போது...
அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு இயல்பாக நடைமுறையில் இருப்பது போல் பேசுவார்...
இந்தக் காலத்தால் மறக்க இயலாத காவியத்தைப் பற்றி ஒரு சுவையான செய்தி...
இந்த திரைப்படம் வெளியான நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக
அறிஞர் அண்ணா அவர்கள் இருந்தார்...
ஒரு நிகழ்ச்சியில் அவருக்கு பொன்னாடை போர்த்தியிருக்கிறார்கள்...
பொன்னாடையை சரி செய்து கொண்டே
" சரியாக இருக்கிறதா "என்று பலமுறை வந்தவர்களிடம் அவர் கேட்டிருக்கிறார்...
அவர்களுக்கு அண்ணா பலமுறை இப்படிக் கேட்டதின் பிண்ணனி புரியவில்லை...
பிறகு தான் புரிந்ததாம்...
இந்த நிகழ்வுக்கு முன்னால் தான்
அண்ணா அவர்கள்
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார்...
அதில் நமது நடிகர் திலகம்
நாதஸ்வரச் சக்கரவர்த்தியாக
அம்சமாக பொன்னாடையை
போர்த்தியிருப்பார்...
நடிகர் திலகம் அவர்கள்
போர்த்திக் கொண்டது போல்
எனக்கு அம்சமாக இருக்கிறதா
என்று தான் அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார்...
ஒரு பாத்திரத்தோடு தன்னை எப்படி ஐக்கியப்படுத்திக் கொள்வார்
நடிகர் திலகம் என்பதற்கு
இது ஒரு சிறு உதாரணம்...
நமது அய்யன் அவர்கள்
ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்
என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை...

இறைவன் எமக்களித்த
அருட்கொடையே...
உயிருள்ளவரை
உம்மைத் துதிக்கும்
உமது ரசிகர்கள் படையே...!!!
வனப்பேச்சி அருணாசலம் 

 

Leave a Reply