• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவியரசு கண்ணதாசன், சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர்.... 

சினிமா

கவியரசு கண்ணதாசன், சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்று

“காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அதனால்அவர்கள் சுயசரிதை எழுதினார்கள் அது சரிதான் ஆனால். நீங்கள் எதற்காகசுயசரிதை எழுதுகிறீர்கள் ‘ என்று கேட்டார்

இப்படி ஒரு கேள்வியை, வேறு யாரிடமா வது கேட்டிருந்தால், கேட்ட‍ நபரை துவம்சம் செய்து, அவரே அலறி அடித்து ஓடும்படி செய்திருப்பார்கள்

ஆனால் கவியரசு கண்ணதாசன் அவர்களோ சிறிதளவும் கேட்ட‍வர் மீது கோவம் கொள்ளாமல் மிகவும் அமைதியாக , ‘ காந்தி , நேரு போன்ற வர்கள் ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்காக எழுதினார்கள். ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் எழுதுகிறேன். இதிலென்ன‍ தவறு இருக்கிறது என்ற சொன்னாராம்.

இப்ப‍டி ஒரு பதிலை சற்றும் எதிர்பாராத அந்த நபரின் முகத்தில், சில நிமிடங்கள் ஈ ஆடினால் கூட தெரியாத அளவிற்கு விக்கித்து போனார் பின் அவரே சுதாகரித்துக் கொண்டு

, கவியரசு கண்ண‍தாசனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றாராம்.
 

Leave a Reply