நயன்தாரா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த NBK 111 படக்குழு
சினிமா
தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவு குடும்பத்தோடு கேக் வெட்டி நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை உலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு NBK 111 படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் NBK 111 படத்தை வீர சிம்ஹா ரெட்டி இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
























