தனுஷுடன் இணைந்து பணியாற்ற ஆசை- நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்
சினிமா
தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.
தற்போது துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் 'காந்தா'. இப்படம் ரசிர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது. இதனிடையே, மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஆந்திரா கிங் தாலுகா' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்து உள்ளார். ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஒரு ரசிகரின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படும் இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் வருகிற 27-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தனக்கு நடிகர் தனுஷை ரொம்ப பிடிக்கும் என நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எனக்கு தனுஷ் சார ரொம்பப் பிடிக்கும். எல்லா நடிகைகளுக்கும் தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கும். எனக்கும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசை இருக்கு. விரைவில் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.























