கணக்காளர்களுக்கான உத்தரவாத தொகையை அதிகரித்த இங்கிலாந்து வங்கி
இங்கிலாந்து வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது தங்கள் சேமிப்பில் அதிகமானவற்றை நாட்டின் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பெறுவார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழான நிலையான தொகை ஒரு நபருக்கு £120,000 ($157.8k) ஆக உயரும் என்று இங்கிலாந்து வங்கி (BoE) செவ்வாய்க்கிழமை (18) அறிவித்தது.
இதன் பொருள், தங்கள் வங்கிகள் அல்லது கட்டிட சங்கம் வங்குரோத்து நிலை அடைந்தால், அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதே தொகையைப் பெறுவது ஆகும்.
நிதிச் சேவைகள் இழப்பீட்டுத் திட்டத்தால் மேற்பார்வையிடப்படும் இந்தத் திட்டம் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
2017 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட முந்தைய வரம்பு £85,000 ($111,797) அடுத்த மாதம் முதல் முறையாக அதிகரிக்கும்.
இங்கிலாந்து வங்கி முன்னதாக மார்ச் மாதத்தில் உத்தரவாதத்தை £110,000 ($144.6k) ஆக உயர்த்த முன்மொழிந்திருந்தது.
ஆனால், நிலையான பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு அதை அதிகரிக்க அவர்கள் முடிவு செய்தனர்.
இந்த வரம்பு 2001 இல் உருவாக்கப்பட்டது, அதன் பின்னர் பல மடங்கு அதிகரித்துள்ளது.
2017 இல் அதன் முந்தைய அதிகரிப்புக்கு முன்பு, உத்தரவாதம் £75,000 ($98.6k) ஆக மட்டுமே இருந்தது.






















