• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை போதைப்பொருள் பறிமுதல்

இலங்கை

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்குகடத்தப்படவிருந்த நான்கரை கோடி ரூபா பெறுமதியுடைய மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சுங்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்றதகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த குறித்த பேரூந்தில் கைவிடப்பட்டநிலையில் இருந்த பயணப்பொதியொன்றில் இருந்து ஒன்றரை கிலோகிராம் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதுடன் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

தனியார் பேரூந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்றதகவலுக்கு அமைய சுங்கஅதிகாரிகளினால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது

இதன்போது ராமநாதபுரம் மாவட்ட கரையோர பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நான்கரை கோடி ரூபா பெறுமதியுடைய சுமார் ஒன்றரை கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

தனியார் பேருந்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுல் செய்யப்பட்ட குறித்த போதைப்பொருள் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ராமநாதபுரம் கடற்கரைபகுதி மீமிசல், எஸ்பி பட்டினம்,தொண்டி, மோர் பண்ணை, தேவிபட்டினம், காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தொன்றை சோதனையிட்ட போதே குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

கைவிடப்பட்டநிலையில் இருந்த பொதியொன்றில் இருந்து ஒன்றரை கிலோகிராம் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதுடன் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதேவேளை போதை பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply