• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

இலங்கை

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு சேமிப்பு நிலையத்தில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் கஞ்சா அடங்கிய பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் உரிமை கோரப்படாத அல்லது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் சேமிப்பு நிலையத்தில் இந்த சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 17 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணி ஒருவரால் இந்தப் பை கைவிடப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

11 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள், பைக்குள் பொலித்தீன் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply