• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இங்கிலாந்தில் அதிகரிக்கும் சட்டவிரோத குப்பை கிடங்குகள்

(Oxfordshire.) ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள (Kidlington) கிட்லிங்டனுக்கு அருகில் (Cherwell) செர்வெல் நதிக்கு அடுத்த ஒரு வயலில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

ட்ரோன் காட்சிகள் மூலம் தெரியவரும் இந்த குப்பைக் குவியலின் அளவு, நூற்றுக்கணக்கான டன்கள் எடை கொண்ட சுமார் 60 மீட்டர் நீளமும் 10 மீட்டர் உயரமும் கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கழிவுகளை அகற்றுவதற்கான செலவு, உள்ளூர் கவுன்சிலின் முழு ஆண்டு வரவுசெலவு திட்டத்தை (சுமார் £25 மில்லியன்) விட அதிகமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் வெள்ள அபாயம் இருப்பதால், நச்சுக்கள் நீர்வழிகளில் கலப்பது மற்றும் தீ ஏற்படும் ஆபத்து போன்ற கடுமையான சுற்றுச்சூழல் அபாயங்கள் இருப்பதாக இங்கிலாந்து உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயல் “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின்” வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதோடு, இது நாட்டில் வளர்ந்து வரும் ஒரு பெரிய முறையான பிரச்சினையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
 

Leave a Reply