புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
இலங்கை
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று காலை கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம், தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்தது.
ஆட்சேர்ப்பு நடைமுறை குறித்து சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்த போதிலும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் உதவி பணிப்பாளர் கே. துலானி அனுபமாவை சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்ததாக அனுர வல்பொல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அலுவலக மேலாண்மைக் குழுவிடம் ஒப்புதல் பெறாமலும், சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் உள்ளிட்ட நிதிச் சலுகைகளை வழங்காமலும் வல்பொல இந்த நியமனத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.






















