திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்
சினிமா
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ரீலீலா தற்போது தமிழ் மற்றும் இந்தி சினிமாக்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் பலரும் ஸ்ரீலீலாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.






















