• Welcome to TamilsGuide
செய்திகள் 1

GMOA பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

இலங்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதுடன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த பேச்சுவார்த்தை தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
 

Leave a Reply