பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் உடலம் - அதிரடியாக கைதாகிய இளைஞன்
பிரித்தானியாவில் பெண் ஒருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பிரித்தானியாவின் கார்டிகன் என்ற இடத்தில் உள்ள நெட்பூல் படகுத் தளத்தில் அந்த பெண் உடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
அதனையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் போது 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டுக் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
























