• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்குக்கு தெற்கு பிரச்சினைகள் குறித்து சுமந்திரன் – நாமல் ராஜபக்ஷ இடையில் விசேட சந்திப்பு

இலங்கை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துள்ளார்.

நேற்று (15) காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது அத்தியாவசியமான விடயம் என்று கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக, அரசியலமைப்புக்கு அமைய இந்தத் தேர்தல்களை நடத்துவது அத்தியாவசியம் என்றும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சியின் பிரதான கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இந்தப் பேரணி குறித்து அறிவிப்பது அத்தியாவசியமான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply