• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களின் 97 மில்லியன் ரூபா பெறுமதியான 97 மில்லியன் ரூபா பெறுமதியான வங்கி நிலையான வைப்புத் தொகை மற்றும் ஆயுள் காப்புறுதிக் கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம், அந்த ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், அதனை மேலும் நீடிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
 

Leave a Reply