தனக்கு கோவில்கட்டி வழிபட்ட ரசிகர்.. நேரில் அழைத்து சந்தித்த ரஜினிகாந்த்
சினிமா
சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்? என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் என்பார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் ரஜினிகாந்த்.
1975 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பின் கதாநாயகன், வில்லன் என இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு, ஸ்டைலுக்கென்று உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது படம் வெளியீட்டை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். ரஜினிகாந்த் சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்து இந்த ஆண்டுடன் 50ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் வருகிறார். இந்த படத்தின் வெளியிட்டுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.
இந்த நிலையில், மதுரையை சேர்ந்த ரசிகர் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து சந்தித்துள்ளார் ரஜினிகாந்த்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ரஜினிக்காக கோவில் அமைத்து வழிபாடு செய்யும் முன்னாள் ராணுவ வீரரும், ரஜினியின் தீவிர ரசிகருமான கார்த்திக் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவர்களுக்கு தனது இல்லத்தையும் சுற்றிக்காட்டிய அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.