சிறுவனை பார்க்க வர வேண்டாம்- அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ்
சினிமா
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுவனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்ல உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராம்கோபால்பேட்டை போலீசார் அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்திக்க வரக்கூடாது.
அப்படி போலீசாரின் எச்சரிக்கையை மீறி வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என அதில் கூறியுள்ளனர்.