திடீரென ஏற்பட்ட பனிப்புயலால் 100 வாகனங்கள் விபத்து
கஸகஸ்தான் நாட்டில் மோசமான வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக கிட்டத்தட்ட 100 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மோசமான வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக நிலைகுலைந்த வாகன சாரதிகள், வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
பனிப்புயல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றன.