• Welcome to TamilsGuide
செய்திகள் 1

IMF உடன் கலந்துரையாடலுக்கு வாருமாறு எதிா்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கை

நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் தேர்தல் மேடைகளில் வழங்கும் வாக்குறுதிகளின் உண்மைத்தன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்கு சர்வதேச நாணயநிதியத்துடன் வெளிப்படையான கலந்துரையாடலுக்கு வாருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஜக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன், சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் பிரேமதாச ஜனாதிபதியுடன் பணியாற்றியவர்கள் இல்லை என்றும், அவரை தானே ஐக்கிய தேசிய கட்சிக்கு கொண்டு வந்ததாகவும்,  கட்சியைப் பாதுகாப்பது பற்றி அவர்களுக்கு தெரியாது என்றும், ஜனாதிபதி தொிவித்துள்ளாா்.

இந்நிலையில் எதிர்கட்சியினர் என்ன செய்ய போகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். எதிர்க்கட்சிகள் மாற்று வழிகளை குறிப்பிட வேண்டும் என்பதுடன், நாட்டை அழித்துவிட வேண்டாம் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், மூன்று கட்சிகளும் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம் என்றும், அந்த விடயத்தை முழு நாட்டுக்கும் சொல்வதுடன்,

இறுதிவரை வரி விதிக்கும் நிலைக்கு வந்துவிடக்கூடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply