• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலாவதியான அரசியல் சித்தாங்களையே ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கியமான வேட்பாளர்கள் இன்னும் காலாவதியான அரசியல் சித்தாங்களையே மேடைகளில் தெரிவித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய சமூகத் தலைவர்கள் மாநாட்டில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” உங்களின் யோசனைகள் அடங்கிய அறிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி செயற்படுத்த எதிர்பார்க்கிறேன். 2 வருடத்திற்கு முன்னர் போராட்டத்தினால் நாட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரிய இழப்புகள் ஏற்பட்டன. நாட்டின் ஸ்தீரத்தன்மை பாதிக்கப்பட்டது. அதற்கு எதிராக பல நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

சிவில் சமூக சுதந்திரத்தை நான் முறியடித்ததாக கூறினர். ஸ்தீரத்தன்மைக்கும் அரசியலமைப்பு அடிப்படைகளுக்கும் இடையில் சமநிலையைப் பேண நடவடிக்கை எடுத்தேன். நாட்டில் இன்று சுதந்திரமும் இருக்கிறது. தேர்தலும் நடக்கிறது. அவற்றை முன்னெடுக்காதிருந்தால் நாமும் பங்களாதேஷத்தைப் போன்று ஆகியிருப்போம்.

இந்த சுதந்திர அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமும் சட்டம் ஒழுங்கும் ஸ்தீரத்தன்மையும் இருக்க வேண்டும். அதனை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். மக்கள் சபையின் ஊடாக கிராமங்கள் இணைக்கப்படும். பிரதேச சபைகளில் இருந்து அரசியல்வாதிகள் இணைக்கப்படுவர்.

சகலரதும் யோசனைகள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களில் ஆராயப்படும். சிவில் சமூகமும் அரசியல்வாதிகளும் இங்கு கைகோர்க்கின்றனர். இவை அனைத்தையும் இணைத்து சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர இருக்கிறோம்.

இதில் கிராமத்திலும், நகரத்திலும் உள்ள மக்களுக்கே முக்கிய பங்கு உள்ளது. கிராம மட்டத்தில் சிவில் செயற்பாட்டாளரகள் உருவாக வேண்டும். எதிர்காலம் பற்றி சிந்தித்தே செயற்பட வேண்டும். கடந்த கால அரசியலில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது.

இல்லாத பொருளை ஏலத்தில் விற்க முடியாது. சிறந்த சமூக முறையொன்றை உருவாக்க நீங்கள் அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன். கடந்த கால அரசியலில் சித்தாங்களில் தொடர்ந்தும் தொங்கிக் கொண்டிருக்க முடியாது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply