• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமூக ஊடகங்கள் குறித்து தோ்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இலங்கை

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குநர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன், தேர்தல் சட்டங்களுக்கு எதிரான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் யூரியூப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் அதிகாரிகளுடன், கலந்துரையாடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள்  உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால்  மா அதிபர் ராஜித ரணசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்வதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா  அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென பிரதி பிரதித் தபால்மா  அதிபர் ராஜித ரணசிங்க  மேலும் தெரிவித்துள்ளார்

இந்நிலையில், தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய 90 பொதிகளை  இன்றையதினம் தபால் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டு பாதுகாப்பு பொதிகளை தபாலகங்களில்  கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்  நாயகம் சமன் ஸ்ரீரத்னாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply