• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

இலங்கை

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் காலை 10ஆம் திருவிழா இடம்பெற்றது.

பத்தாம் திருவிழாவின் காலை திருவிழாவின் போது கைலாய வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேதரராய் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் தொடர்ந்து உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பத்தாம் திருவிழாவான இன்றைய தினம்  மாலை திருமஞ்ச திருவிழா இடம்பெறவுள்ளது.
 

Leave a Reply