• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றில் உள்ள பல வெளியேறும் வழிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மட்டால வெளியேறும் வழி, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த வெளியேறும் வழி, அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மிரிகம நுழைவாயில் மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் வழி ஆகியவற்றின் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் சாரதிகள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply