வீட்டை விற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி- எத்தனை கோடி பாருங்க
சினிமா
நடிகை அனுஷ்கா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கிறார்.
அவர் உடல் எடையை குறைக்க தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
வீடு விற்பனை?
இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டி ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டை 12 கோடிக்கு விற்பனை செய்துவிட்டார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இருப்பினும் அனுஷ்கா தரப்பு இதை உறுதி செய்யவில்லை.
அனுஷ்கா ஹைதராபாத்த்தை விட்டு வெளியேறுகிறாரா? தனது குடும்பம் இருக்கும் மங்களூரில் செட்டில் ஆக போகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.






















