• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் அதிகரித்துள்ள திருட்டுக்கள் - திணறும் வர்த்தகர்கள்

கனடா

கனடாவில் கடைகளில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதனால் வர்த்தகர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியான கடைத் திருட்டுகளால் விரக்தியடைந்த ஒட்டாவாவைச் சேர்ந்த சிறு வர்த்தகர் ஒருவர், சந்தேகநபர்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

பில்லிங்ஸ் பிரிட்ஜ் ஷாப்பிங் சென்டரில் அமைந்துள்ள 'ஜாலிடோஜோ' கடையின் உரிமையாளர் யிங்சின் சியோங் நான்கு வாரங்களுக்கு முன்புதான் தனது கடையை இந்த இடத்தில் திறந்ததாகவும், அதற்குள் தொடர் திருட்டுகள் தனது வணிகத்தைப் பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில், சுமார் 10 டொலர் மதிப்புள்ள பொம்மை ஒன்றை நபர் ஒருவர் திருடியதாகக் கூறி, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை அவர் தனது கடையின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"வீடியோவை இணையத்தில் பதிவிடும்போது, குறைந்தபட்சம் சில பொருட்களாவது திரும்பக் கிடைக்கின்றன," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, புகைப்படத்தில் இருந்த நபர் முகநூல் மூலம் கடையைத் தொடர்பு கொண்டு, தான் எதையும் திருடவில்லை என மறுத்ததுடன், தான் ஒரு சிறுவர் எனக் கூறி புகைப்படங்களை நீக்குமாறு கோரியுள்ளார்.

எனினும், அந்த நபரின் வயது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அந்தப் பொருளுக்குப் பணம் செலுத்துவதாகப் பின்னர் முன்வந்துள்ளார். இந்தப் பதிவுகளுக்குச் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
 

Leave a Reply