தையிட்டி விகாரையில் மதச் சடங்குகள் - எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் குதித்த யாழ். மக்கள்
இலங்கை
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(09.11.2026) கடும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றுள்ளது.
தையிட்டியில், தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி, எவ்வித அனுமதிகளும் இன்றி விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையை அகற்றி , காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க கோரி நீண்ட காலமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், குறித்த விகாரையில் மத சடங்கு ஒன்று இன்றைய தினம் மிக பெரியளவில் நடைபெற்றுதுடன், அதற்காக தென்னிலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான பௌத்தர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






















