டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி
இலங்கை
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் பொழுது, இன்று(09.11.2026) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337 ரூபாயாக நிலையாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 328.05 ரூபாயிலிருந்து 328.09 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலையும் 337.00 ரூபாயிலிருந்து 337.05 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வளைகுடா நாட்டு நாணயங்கள் உட்பட பல்வேறு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.





















