லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண்
UK Woman Shares Lottery Win Abroad Trip: பிரித்தானிய பெண் ஒருவர் தனக்கு லொட்டரியில் விழுந்த பரிசுத் தொகையில் அண்டை வீட்டாரின் சுற்றுலா கனவை நிறைவேற்றியுள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்கும் ஹோனோரட்டா ஜம்ரோசிக் (Honorata Jamrozik) என்ற பெண், 2026-ஆம் ஆண்டு Omaze Monthly Millionaire Draw லொட்டரியில் 1 மில்லியன் பவுண்டு பரிசு வென்றார்.
ஆனால், முழு தொகையை தனக்காக வைத்துக்கொள்ளாமல், 14 ஆண்டுகளாக அண்டை வீட்டாராக இருந்த குடும்பத்தினருக்கு 5,000 பவுண்டு வழங்கினார்.
இதன் மூலம் அவர்கள் முதல் முறையாக விடுமுறைக்கு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
தந்தையின் ஆசீர்வாதம்
ஜம்ரோசிக், தனது தந்தையை இழந்த துயரத்தில் இருந்தபோது இந்த பரிசை வென்றார். அவர், “இந்த வெற்றி என் தந்தையின் ஆசீர்வாதம்” என்று உணர்ந்ததாக கூறினார்.
25 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் இவர், முன்பு 7 ஆண்டுகள் foster care (குழந்தை வளர்ப்பு பராமரிப்பு) செய்திருந்தார். பெற்றோரைக் கவனிக்க வேண்டியதால் அதை நிறுத்தியிருந்தார். இப்போது இந்த வெற்றியின் மூலம் மீண்டும் அந்த சேவையை தொடர விரும்புகிறார்.
அவரும், கணவரும், 20 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் உள்ளனர். அவர்கள் திருமண ஆண்டு விழாவை கொண்டாட சிறப்பு சுற்றுலா திட்டமிட்டுள்ளனர். தாயாரையும் அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த Omaze லொட்டரி, மாதந்தோறும் ஒரு வெற்றியாளருக்கு 1 மில்லியன் பவுண்டு பரிசு வழங்குவதோடு, 2020 முதல் 140 மில்லியன் பவுண்டுக்கும் மேல் பிரித்தானியாவில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி உதவி செய்துள்ளது.






















