• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன்

இலங்கை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் 36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்முறை ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நேற்று முந்தினம் (30) மாலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது

இந்த விளையாட்டு விழாவில் நேற்று (31)இடம்பெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபில் சராப் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்

 மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த ரூபில் சராப் நேற்றையதினம் இடம் பெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றி 1:52:59 நேரத்தில் போட்டியை ஓடி முடித்து இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டதோடு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் 
 

Leave a Reply