• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவில் தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோவிற்கு கிழக்கே உள்ள தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் க்ஸ்டோவோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இரவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அதில் எரிபொருள் மற்றும் லூப்ரிகன்ட்களை உற்பத்தி செய்யும் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டன.

இந்த நிலையில் பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் மீண்டும் தொடங்கியுள்ளதாக மாஸ்கோ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து நிஸ்னி நோவ்கோரோட்டின் ஆளுநர் கிளெப் நிகிடின், இரவில் பெரிய ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும், அதில் க்ஸ்டோவோ மாவட்டத்தில் உள்ள தொழில்துறை நிறுவனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் தனது அறிக்கையில், 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அழிக்கப்பட்டன என்றும், முதற்கட்ட தகவல்களின்படி, உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், அந்த ஆலையின் செயல்பாடுகள் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை.

பிப்ரவரி 2022-இல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, உக்ரைனிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உக்ரைனின் தலைநகரான கீவ் ரஷிய எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், டீசல் விலை உயர்வுக்கு இத்தகைய தாக்குதல்களே காரணம் எனக் கூறி, இவற்றை நிறுத்துமாறு உக்ரைனுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply